November 10, 2011

Scribblings 10-11-2011

சென்ற பதிவோட Scribblings 250 பதிவு பார்த்திருச்சு. பெரிய சாதனையெல்லாம் ஒன்னுமில்லைன்னாலும், மொக்கை போட்டே இம்புட்டு பதிவு தேத்தினது (எனக்கு) பெரிய விஷயம். அதோட நம்ம ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் 250 ஆகிடுச்சு. ஹை. வாட் எ மாட்ச்:) ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே.
******

ஏற்கனவே நான் வண்டியோட்டப் பழகின வீரதீர பராக்கிரமங்கள எழுதியிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு திரும்பவும் கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். ஏற்கனவே பழகின விஷயமாருந்தாலும், சென்னை ட்ராஃபிக்கை நினைச்சாலே உதறது. இன்னியோட ஆறு க்ளாஸ் வண்டிக்கும், சொல்லித்தர்றவருக்கும் எந்த சேதாரமுமில்லாம வெற்றிகரமா முடிஞ்சிருச்சு (ஏதாவதுன்னா எகிறடமாட்டோம்:)). இன்னும் 6 க்ளாஸ் பாக்கி. ஆண்டவா ரோட்ல போறவங்கள காப்பத்துப்பா.
*******

ஒரு வாரமா அடிச்சு ஊத்திட்டு, ஒரு வழியா மழை ஓஞ்சிருச்சு. ஒரு வாரத்துக்கே, முடியல. ரோடெல்லாம் தண்ணி. வீட்டு வாசல்ல, கணுக்கால்க்கும் மேல தண்ணி தேங்கியிருந்தது. பெசண்ட் நகர் MG ரோடு ரொம்ப மோசமாகிருச்சு. அதுவும் வண்ணாந்துறை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளம் விழுந்து, வண்டில போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. எப்பதான் சரி பண்ணுவாங்களோ:(
*******

ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்துல மம்மி, ஷிஃப்டிங் வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க. இதையெல்லாம் மாத்தறதுக்கு, உருப்படியா சாலைகளை சீரமைக்கறது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இப்ப சென்னை மக்களுக்கு தேவை, மோசமான சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து விடுதலையும், குப்பைகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளிலிருந்து விடிவும்தான். இல்ல இப்படித்தான் தொடரும், அதுக்குத்தான் நிறைய ஆஸ்பத்திரி தொறக்கறாங்களோ என்னமோ.
**********

சமீபக்காலங்களில் ரெண்டு ஆல்பங்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒன்னு மயக்கம் என்ன. மற்றொன்று Rockstar. மயக்கம் என்ன படத்தில் எல்லா பாட்டுகளுமே பிடித்திருக்கிறது. “நான் சொன்னதும் மழை வந்துச்சா?”, “ஓட ஓட தூரம் குறையல”, “பிறை தேடும் இரவில்” ஆகிய பாடல்கள் ஃபேவரைட். அதே போல் அந்த தீம் ம்யூசிக். ஆவ்சம். கேட்க கேட்க எங்கேயோ பறக்கும் ஃபீலிங். ராக் ஸ்டாரில் ரஹ்மான் சிம்ப்ளி ராக்ஸ். சட்டா ஹக், குன் ஃபாயா, கட்டியா கரூன், ஜோ பி மைன், தும் ஹோ, நாதான் பரிந்தே என அத்தனையும் அட்டகாசம். வெல்கம் பேக் ரஹ்மான்.

5 comments:

CS. Mohan Kumar said...

மீ த பஸ்ட்டு !!

250--க்கு வாழ்த்துகள் !!

(இப்படி எல்லாம் பின்னூட்டம் போட்டா தான் பதிவராம் !!)

CS. Mohan Kumar said...

நானும் கூட இப்போ தான் 250 பதிவு தாண்டினேன். ஆனா ப்ளாகில் பகிர மறந்து போயிடுச்சு;

மயக்கம் என்ன பாட்டெல்லாம் பிடிக்குதுன்னு சொல்லி யூத்துன்னு நிரூபிக்கிறீங்க

Cable சங்கர் said...

rock star realy rocks vidya

துரைடேனியல் said...

சென்னை டிராபிக் மட்டும் இல்ல சகோ. எல்லா ஊருலயும் அப்படித்தான்.

Raghu said...

ராக்ஸ்டார் - ஒரு ப‌ட‌த்தை பாட‌ல்க‌ளுக்காக‌வே பார்க்க‌வேண்டும் என்ற ஆசை ரொம்ப‌ நாள் க‌ழித்து வ‌ந்திருக்கிற‌து. ர‌ஹ்மான் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.

Tango for Tajனு ஒரு instrumental இருக்கு, அதையும் கேட்டு பாருங்க‌. ர‌ஹ்மான் ர‌ஹ்மான்தான்!